Thursday , October 16 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சரத் பொன்சேகாவுக்கு புதிய அமைச்சு பதவி! அச்சத்தில் மகிந்த தரப்பு!

சரத் பொன்சேகாவுக்கு புதிய அமைச்சு பதவி! அச்சத்தில் மகிந்த தரப்பு!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பொலிஸ் துறைக்கு பொறுப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியதை அடுத்து ஒரு தரப்பு கலவரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு தரப்பு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட தரப்பு என தெரியவருகிறது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்த, காணாமல் போன சம்பவங்கள், ஆட்கடத்தல்,கொலைகள் மற்றும் அச்சுறுத்தல் உட்பட பல குற்றச் செயல்களுடன் முப்படை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

ஏற்கனவே கடற்படையினர், இராணுவத்தினர் என சில பாதுகாப்பு படை உறுப்பினர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சரத் பொன்சேகா சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டால், அவர் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவார் என்பதை முப்படை உறுப்பினர்கள் நன்கு அறிவர்.

முன்னாள் இராணுவ தளபதியை பற்றி நன்கு அறிந்தவர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் என்பதே இதற்கு காரணம்.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட சேவையில் ஈடுபட்டிருந்த காலத்தில் பொன்சேகாவுடன் எதிரான மனநிலையில் இருந்து வந்தார். அவரும் இந்த செய்தியால் கலவரமடைந்துள்ளதாக பேசப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் போன சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட மீது குற்றம் சுமத்தப்படுவதுடன் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் கடற்படையினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாதுகாப்பு படையினரின் பெரும்பான்மையானவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கொள்கையை கடைப்பிடித்து வருகின்றனர்.

இதனால், கடந்த ஆட்சிக்காலத்தில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் தேவைக்கு அமைய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் துறைக்கு பொறுப்பான அமைச்சர் தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதால், பல குற்றவாளிகள் சுதந்திரமான நடமாடி வருகின்றனர்.

கடந்த காலத்தில் நடந்த குற்றச் செயல்கள் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்துவதாக நல்லாட்சி அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்ததுடன் அதனை நிறைவேற்றத் தவறியது.

நீதி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர்களாக பணியாற்றியவர்கள் குற்றவாளிகளை காப்பாற்றும் கொள்கையை கடைப்பிடித்ததால், இறுதியில் அவர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்ய நேர்ந்தது.

இந்த நிலையில், சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா, இந்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்படுவதை தடுக்கும் முயற்சிகளில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய படைத்தரப்பு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்சேகா சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் எனவும் அவர் அந்த பதவியில் நியமிக்கப்பட்டதால், தனிப்பட்ட ரீதியான பழிவாங்கல்களில் ஈடுபடுவார் என்று குறித்த தரப்பினர் செய்திகளை உருவாக்கி வருவதாக தெரியவருகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv