Sunday , August 24 2025
Home / ராசிபலன் / சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொதுவான பரிகாரங்கள்

சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொதுவான பரிகாரங்கள்

சனி காயத்ரீ மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!
ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

சனி ஸ்லோகம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

அர்த்தம்:

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

பொதுவான பரிகாரங்கள்:

• தினமும் வினாயகர் – ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

• தினமும் வினாயகர் அகவல் – ஹனுமான சாலீசா – சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்று தரும்.

அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும்.

• தினமும் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்வது – குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும்.

• தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

பொது பலன்கள்:

குரு வீட்டிற்கு சனி மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் மிகப் பெரிய தடை இருக்கும். திருமணம் சம்பந்தப்பட விஷயங்களில் தொய்வு ஏற்படும்.

ஆனால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும்.

அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். இடி மின்னல் அதிகம்.

இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும்.

புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும்.

மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv