அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதென்று பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன
கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டது. சாரதியும் கைது செய்யப்பட்டார்.
சாரதியிடம் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரை கிளிநொச்சி நிதிமன்றில் முற்படுத்ததுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பளை பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன