Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதியை சந்தித்தார் இரா. சம்பந்தன்!

ஜனாதிபதியை சந்தித்தார் இரா. சம்பந்தன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதியிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்ப நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன தோல்வியை தழுவிக்கொண்டன. இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

நிலைமையினை சரிசெய்யும் நோக்கில் பல்வேறு தரப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான பின்னணியில் இரா. சம்பந்தன் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளார்.

இதன்போது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதியிடம் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், “2020 வரை, தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர வேண்டும் என்பதே எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தாக இருந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை ஜனாதிபதிக்கு இரா. சம்பந்தன் நினைவுபடுத்தினார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றாலும் கூட ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில், மக்களின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.” என்று கூறினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv