Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சமல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவிப்பு

சமல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவிப்பு

சமல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவிப்பு

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கமவும் எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரஜாவுரிமை வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் சமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவார் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் தனி வேட்பாளரை நிறுத்தாத பட்சத்தில் குமார வெல்கம சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv