Sunday , October 19 2025
Home / முக்கிய செய்திகள் / சமாஜ்வாடி கட்சியில் பிளவு கிடையாது, புதிய கட்சியை தொடங்கப்போவது இல்லை – முலாயம் சிங் யாதவ்

சமாஜ்வாடி கட்சியில் பிளவு கிடையாது, புதிய கட்சியை தொடங்கப்போவது இல்லை – முலாயம் சிங் யாதவ்

உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி – மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக சமாஜ்வாடி கட்சியில் பெரும் மோதல் வெடித்தது, இது கட்சி உடைவிற்கும், தேர்தலில் தோல்விக்கும் வழிவகை செய்தது. சமாஜ்வாடி கட்சியின் உடைவு பாரதீய ஜனதாவிற்கு ஆதரவான நிலையை மேலும் வலுப்படுத்தியது. சமாஜ்வாடி கட்சியின் பிளவு தேர்தல் ஆணையம் வரையில் சென்று, கட்சி, சின்னம் அகிலேஷ் யாதவிற்கே சென்றது.

இதனையடுத்து தனிப்பிரிவாக செயல்பட்ட முலாயம் சிங் யாதவ் பா.ஜனதா சார்பு நிலை கொண்டிருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிலையில் முலாயம் சிங் யாதவ் தனிக்கட்சியை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முலாயம் சிங் யாதவ், இப்போதைக்கு நான் எந்தஒரு கட்சியையும் தொடங்கவில்லை என கூறிஉள்ளார். மேலும் பேசுகையில், என்னுடைய முடிவுகளை அகிலேஷ் யாதவ் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், மகனாக என்னுடைய வாழ்த்துக்கள் அகிலேஷ் யாதவிற்கு உள்ளது. தந்தை மற்றும் மகன் இடையே எவ்வளவு நாட்கள் வேறுபாடுகள் இருக்கும் என யாராலும் கூற முடியாது என்றார். முலாயம் சிங் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவருடைய சகோதரர் ஷிவ்பால் யாதவ் உடன் இல்லை.

ஷிவ்பால் யாதவ் இல்லாதது குறித்து முலாயம் சிங் யாதவிடம் கேள்வி எழுப்பட்டது, அவர் பதில் அளிக்கையில், எடாவக், மெயின்பூரியில் முக்கியமான பணிக்காக சென்று உள்ளார் என குறிப்பிட்டார். இவ்வருட தொடக்கத்தில் அகிலேஷ் யாதவால் முலாயம் சிங் யாதவ் மற்றும் ஷிவ்பால் யாதவ் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டனர். இப்போது நீங்கள் மகன் அகிலேஷ் யாதவுடன் உள்ளீர்களா? தம்பி ஷிவ்பால் யாதவுடன் உள்ளீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது சமாஜ்வாடியுடன் உள்ளேன் என பதிலுரைத்து உள்ளார் முலாயம் சிங் யாதவ். முலாயம் சிங் யாதவின் இந்த அறிவிப்பை பாராட்டி உள்ள அகிலேஷ் யாதவ் வாழ்த்துக்களையும் பகிர்ந்து உள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv