Friday , June 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை

சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை

குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சங்ரிலா விருந்தகத்தில் குண்டு தாக்குதலை நடத்திய இருவரில் ஒருவர் சஹ்ரான் ஹஷீம் என மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனைக்காக அவரின் மகள் மற்றும் சகோதரியின் இரத்த மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் அண்மையில் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv