கேரளா மாநிலம் கொல்லத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சியில் திட்ட மேலாண்மை அலகு அலுவலகத்திற்காக 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கேரளா மாநிலம் கொல்லத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 லட்சம் ரூபாய் வழங்கினார். அதே விபத்தில் காயமடைந்த முத்து என்பவருக்கு 50ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, நெல்லையை சேர்ந்த முருகன் என்பவர் கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரழைத்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 7 மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தன. இதனால் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.