ஆர்.கே நகர் இடைத்தேர்தலால் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பிரச்சினை இல்லை
தமிழ்நாடு சட்டசபையின் அடுத்த கூட்டத்தை 16-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கூடுகிறது.அன்று காலை 10.30 மணிக்கு 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கபட்டு உள்ளது. அடுத்தமாத ஏப்ரல் 12 ந்தேதி தேர்தல் நடக்கிறது. இன்று இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்து உள்ளது. இதனால் 16 ந்தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்ச் எய்யபடுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் தேர்தல் ஆணையம் பட்ஜெட் தாக்கல் செய்யலாம் பிரச்சினை இல்லை. ஆட்சேபனை எழுப்பப்ப்டும் படசத்தில் சில வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. ஆர்.கே நகரில் தேர்தல் நடைமுறைகள் 16 ந்தேதி முதல் அமுலுக்கு வருகிறது.