புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கால்வாய் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகளும், ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
தனியார் பாதுகாப்பு அதிகாரியொருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
குப்பைகள் அகற்ற பாவிக்கும் கறுப்பு நிற பொலித்தீன் பையால் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.