Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / திரும்புகிறது வழமைக்கு யாழ். பல்கலை

திரும்புகிறது வழமைக்கு யாழ். பல்கலை

வகுப்புப் பகிஷ்கரிப்பைக் கைவிட்டு இன்று(18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது முக்கிய பிரச்சினையாக கருதிய சில பிரச்சினைகளை தீர்க்கக் கோரி கடந்த 15.08.2019 முதல் வகுப்புப் புறக்கணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் எமது பல்கலைக்கழகத் தகுதிவாய்ந்த அதிகாரியால் நாமறிய இவை குறித்துச் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நடவடிக்கைகள் மீது பூரண திருப்தியற்ற நிலையிலும், தகுதிவாய்ந்த அதிகாரியின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலும் வகுப்புப் புறக்கணிப்பால் மேலும் மேலும் பாதிக்கப்படப் போவது எமது மாணவர்களினது கல்வி நடவடிக்கையே என்பதாலும் எதிர்வரும்-18.09 2019 இலிருந்து வழமை போன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.

இனிமேலாவது தமிழினத்திற்கு எமது பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தையும், அது உருவாக்கப்பட்ட உன்னத நோக்கத்தையும் அறிந்தவர்களாக பல்கலைக்கழக மூதவை, பேரவை மற்றும் தமிழ் அரசியல் தலைமைகள் விளங்குமாறு உரிமையுடன் பொறுப்புள்ள மாணவர் ஒன்றியமாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv