Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / வீதியை சீர­மைக்கக் கோரிக்கை

வீதியை சீர­மைக்கக் கோரிக்கை

தாளை­ய­டி­யில் இருந்து கட்­டைக்­காடு செல்­லும் முதன்மை வீதியை சீர­மைத்­துத் தரு­மாறு பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் உள்ள கட்­டைக்­காடு கிரா­மத்­தை­யும் தாளை­யடிக் கிரா­மத்­தை­யும் இணைக்­கம் முதன்மை வீதி மிக மோச­மான நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது என பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த கட்­டைக்­காட்­டினைச் சேர்ந்த விம­ல­தாஸ் தெரி­வித்ததாவது; ‘நான் 12 வய­தில் இருக்­கும்­போது இந்த வீதி­யில் பள்­ளிக்கு நடந்­து­சென்­றேன். அப்போதிலிருந்து இன்றுவரை, சுமார் 40 வரு­டங்­க­ளாக இந்த வீதி சீர­மைக்­கப்­ப­டாது காணப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பாக அனைத்து தரப்­பி­ன­ருக்­கும் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம். இருப்­பி­னும் இது­வரை யாரும் சீர­மைப்­ப­தற்கு முன்­வ­ர­ வில்லை. குறித்த வீதி­யா­னது மாகாண சபைக்­கு­ரிய வீதி யாகும்.

அவர்­க­ளி­டம் கடந்த வரு­டம் கேட்­ட­போது, இந்த வரு­டம் சீர­மைத்து தரு­கின்­றோம் என்­றார்­கள் ஆனால் இந்த வரு­ட­மும் முடி­ யப்­போ­கின்­றது இன்­னம் சீர­மைக்­கப்­ப­ட­ வில்லை. இத­னால் கல்வி, சுகா­தா­ரம், போக்­கு­வ­ரத்து போன்­றவை பாதிக்­கப்­ப­டு­கின்­றது. குறித்த வீதி­யினை 9 கிரா­ம­ அலுவலர் பிரி­வு­களைச் சேர்ந்த மக்­கள் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.’ என்­றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv