Sunday , December 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மாவீரர் தின நிகழ்வை தடை செய்ய கோரிக்கை

மாவீரர் தின நிகழ்வை தடை செய்ய கோரிக்கை

வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர் பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர், “நாட்டில் தீவிரவாத அமைப்பொன்றை நினைவுகூருவதற்கு சட்டத்தில் அனுமதியில்லை.

எனவே, மாவீரர் தினம் என்பது அரசியல் அமைப்பிற்கு முரணான ஒன்றாகும். கடந்த அரசாங்கத்தில் சிலர் இதற்கு அங்கீகாரம் அளித்தனர்.

எனினும் தற்போது, மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியளிக்க முடியாதென பொலிஸ்மா அதிபரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv