சைட்டம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புலமைப்பரிசில் ரத்து செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் தலையீடு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சைட்டம் மாணவர்களின் நடவடிக்கை குழு அண்மையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் கூறுகையில்,
சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைக்கும் தீர்மானம் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டமை தொடர்பில் தமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனினும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு உடனடியான தீர்வை எதிர்ப்பார்க்கின்றோம்.
சைட்டம் மாணவர் ஒருவரிடம் வருடாந்த கட்டணமாக 1.3 மில்லியன் ரூபாய், கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியால் கோரப்படுகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை மாணவர்கள் பதிவுக்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் ஒருவரிடம் 1.3 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.