கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.
இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தை யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தமது தேவைக்காக பயன்படுத்தி வந்தனர்.
இதன்போது குளத்துக்கு அருகில் புத்தர் சிலை நிறுவப்பட்டு இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டுவந்தது.
குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 3000 மில்லியன் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு வரும்நிலையில் பொறியியளாரின் அலுவலகம் மீள் புனரமைப்பு காரணத்தால் இராணுவம் அங்கிருந்து வேறு ஓர் இடத்திற்கு நகர்த்தப்பட்டது.
பின்னரும் புத்தர் கோவில் குளத்தின் அருகிலே இருந்தது.
தற்போது குளத்தின் அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படும் என்பதன் காரணத்தால் புத்தர் கோவிலிலிருந்த சிலை இராணுவத்திரால் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.