Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வறுமையில் வாடும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

வறுமையில் வாடும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்!

உறவுகளை பறிகொடுத்து வறுமையில் வாடும் தமக்கு உதவி செய்யுமாறு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் 25 பேருக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ நாம் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து, உறவுகளை பறிகொடுத்து தற்போதுவரை தமது உறவுகள் எங்கே என தெரியாத நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.

அரசாங்கத்தின் உதவிகளும் எமக்கு கிடைப்பதில்லை என்பதோடு தாம் வறுமையிலேயே வாழ்கின்றோம். எமது நிலையை கருத்திற்கொண்டு தமக்கு உதவி செய்ய நல்லுள்ளம் படைத்தவர்கள் முன்வரவேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv