21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் பயணித்த சந்திர கிரகணத்தை அதிகளவான இலங்கையர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பு நேற்று ஏற்பட்டுள்ளது.
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும் போது ஏற்படுகின்றது.
அதற்கமைய நேற்று இரவு 10.45 மணிக்கு ஆரம்பமாகி இன்று அதிகாலை 4.58 மணி வரை இந்த சந்திரகிரகணம் நீடித்துள்ளது.
சந்திர கிரகணம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி கொடுக்கின்ற நிலையில் அது BLOOD MOON என்று அழைக்கப்பட்டது.
நேற்று இரவு சந்திர கிரகணம் உலகின் பல நாடுகளில் தெளிவாக காட்சி கொடுத்த நிலையில் இலங்கையும் தெளிவாக காட்சி கொடுத்துள்ளது.
இலங்கையின் பல பாகங்களிலுள்ள மக்கள் தமது வெற்றுக் கண்ணினால் சந்திர கிரகணத்தை பார்த்துள்ளது.
இதுபோன்றதொரு சந்திர கிரகணத்தை பார்வையிட 2025 ஆம் ஆண்டு வரை இலங்கையர்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.