விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்னாபிரிக்கா 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய – தென்னாபிரிக்க அணிகள் மோதும் 2ஆ-வது
டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் சுப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை 1–-1 என்ற கணக்கில் சமன் செய்யுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது மிகவும் சவாலானது.
தென்னாபிரிக்கா செஞ்சூரியனில் 2 டெஸ்ட்களில் மட்டுமே தோல்வியுற்றிருக்கிறது. மொத்தம் விளையாடியுள்ள 22 போட்டிகளில் 17இல் வெற்றிபெற்றுள்ளது. அத னால் தென்னாபிரிக்காவுக்கு இந்த மைதானம் ராசியான மைதானம் என்று தெரிவிக்கப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் இந்தியா மீண்டெழுமா அல்லது தென்னாபிரிக்கா தொடரை வெல்லுமா என்று.