அலரிமாளிகையில் தற்பொழுது பரபரப்பு நிலை நிலவுவதாகவும் அவசரமான செய்தியாளர் மாநாடு ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் மாநாட்டினை ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாவது..
இதில், ஜனாதிபதி மைத்திர்பால சிறிசேன ஒரு முழுமையான சர்வாதிகாரியாக மாறாமல் அரசியலமைப்பை பின்பற்றவேண்டும் என அவரிடம் கேட்பதாக ரணில் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட அவர், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் நினைத்தபடி பிரதமரைத் தீர்மானிக்கமுடியாது எனவும் நாடாளுமன்றப் பெரும்பான்மை உள்ள ஒருவரே பிரதமராக நியமிக்கப்படவேண்டும் எனவும் கூறினார்.
அத்துடன் மைத்திரியின் இந்த செய்கைகள் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.