கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை நாடொன்றுக்கு வழங்கமுடியாதென்ற ஜனாதிபதியின் தீர்மானத்தை ரணில் மறுதலித்திருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற காரணங்களாலேயே ரணிலை விட்டு அவர் பிரிந்ததாக தயாசிறி ஜெயெசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மா நாட்டின்போதே அவர் மேற்படி கூறினார்.
”19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரை நீக்கவும் அமைச்சரவையை நியமிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை நாடொன்றுக்கு வழங்க முடியாதென ஜனாதிபதி கூறினார்.
ஆனால் அந்த நாட்டுக்கு சென்ற ரணில் அதனை வழங்க உறுதியளித்திருந்தார். இப்படியான தவறுகள் நடந்தன.
பொறுமை எல்லை மீறியதால் தான் ரணிலுடன் இணைந்து செயலாற்றமுடியாமல் ஜனாதிபதி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினார்.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் சபையின் இடது பக்கம் இருப்பவர்களே ஆளுங்கட்சியினர் என்று கருதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக செயற்படுகிறார்.
அதனால்தான் அவரை சபாநாயகராக நாங்கள் ஏற்க மறுக்கிறோம்” என்றார்.