நீதிமன்ற விசாரணைகள் குறித்த போதிய அறிவின்றி அவை தொடர்பாக கருத்து வெளியிடுவதை தவிர்க்குமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று வெளியிடப்பட்டள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு கட்சித் தலைவர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நீதிமன்ற விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அதற்கான பூரண அறிவை கொண்டிருக்க வேண்டும் என்றும், இவ்விடயங்களில் கட்சி உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.