Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிளிநொச்சியில் ரணிலின் அதிரடி உத்தரவு

கிளிநொச்சியில் ரணிலின் அதிரடி உத்தரவு

வடக்கில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா நிதியுதவி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்து மேற்படி நிவாரண உதவித்தொகையை அதிகரிக்கவும் அவர் முடிவெடுத்துள்ளார்.

அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை உடனடியாக புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களையும் அவர் பணித்துள்ளார்.

எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு வார காலத்துக்கு தொடர்ந்து உலருணவுப் பொருட்களை வழங்கவும் தீர்மானம் அவர் தீர்மானித்துள்ளார்.

இன்றைய தினம் வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காக வந்திருந்த பிரதமர் ரணில் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv