பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே,
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டு எதிரணி ஆதரவு வழங்கும். இந்தப் பிரேரணைவரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
முன்னதாகஇ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எனினும் அதில் தாமதம் ஏற்பட்டது.
பிரதமரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரும் பிரேரணையில் நாங்கள் கையெழுத்திடுவோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மிகவும் முக்கியமான உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.