யாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியகளுக்குரிய நியமனங்களை பிரதமர் வழங்கி வைப்பார் என வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தொணடர் ஆசிரியர்களுக்குரிய தமைகளை பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விகர்மசிங்க தலைமையில் நடைபெறவிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய மாகாணஙகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து வெளியிடுகையில் இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.
தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தமைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு 2013ம் ஆணடுக்கு முன்னர், தொடராக மூன்றாண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களின் சேவைகள் கவனத்திற் கொள்ளப்படும் என்றும் இதன் அடிப்படையில் எதிர்வரும் 22ம் திகதி யாழ்ப்பாணத்தில் 457 ஆசிரிய நியமனஙகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.