நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக் கூடாது. அந்த முறைமை நாட்டிற்கு இன்றியமையாதது என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்கி, சர்வதேச சக்திகளின் அனுசரணையுடனேயே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றிருக்கின்றார்.
இதனை மக்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் வழங்கிய தீர்ப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் குறித்த மக்கள் அபிப்பிராயத்தை மீள் பரிசீலனை செய்வது அவசியமாகும்.
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பில் தமது மகிழ்ச்சியை வெளியிட்டிருந்த பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புக்கள் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளன என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.