Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை அரசியல் யாப்பில் இளைஞர் யுவதிகளுக்கு நம்பிக்கையில்லை

இலங்கை அரசியல் யாப்பில் இளைஞர் யுவதிகளுக்கு நம்பிக்கையில்லை

இலங்கையின் அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர், யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இளைஞர் – யுவதிகளை தன்னார்வ சேவையில் ஊக்குவிக்கும் புதிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் நேற்று உரையாற்றினார்.

சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் – யுவதிகள் இதில் கலந்து கொண்டனர்.
நேற்றுக் காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாட்டின் அரசியல் யாப்பு மற்றும் கொள்கையை மாற்றுவதற்கு தாம் முன்னிற்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டினார்.

தற்போதைய அரசியல் அடிப்படைக்கு மத்தியில் ஏனைய நாடுகளுக்கு அமைவாக அபிவிருத்தி காண்பதற்கு நம்மால் முடியாமல் உள்ளது.

இதற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது உள்ள நடைமுறையை உடனடியாக மாற்ற வேண்டும். இலங்கை அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டிற்கு சரியான கொள்கை இருக்கின்றதா என்பது தொடர்பில் அனைவரும் கண் டறிய வேண்டும் என்றும் சர்வதேச இளைஞர் தினத்திற்கு அமைவாக இளைஞர் – யுவதி களின் தன்னார்வ சேவையை ஊக்குவித்து, இவர்களுக்கு தேசிய மட்டத்தில் பாராட்டுக் களை பெற்றுக் கொடுப்பதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv