வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம் என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்கள் மகிந்த அணியினருடன் ஒன்று சேரலாம் என யாழில் வைத்து தெரிவித்துள்ளார்.
வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து உரையாற்றுகையில்
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.
புதிய அரசியலமைப்பு மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முற்படுகையில் மகிந்த அணியினர் நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாக பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை திசை திருப்பி வருகின்றனர்.
அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இதுவரை எந்த யோசனைணையும் அதற்காக முன்வைக்காத நிலையிலேயே அவர்கள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் நாட்டைப் பிளவுபடுத்துவதென்றால், அதற்கு வழிவகுப்பவர்கள் அந்தத் தரப்பினரே, நாட்டைப் பிளவுபடுத்த நினைப்பவர்கள் அவருடன் சேரலாம்
அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள அந்த அணியினர் அரசாங்கத்தினால் நாம் மக்களுக்குப் பெற்றுக்கொடுத்து வரும் ஜனநாயகத்திற்கும், சுதந்திரத்திற்கும், எதிராக செயற்பட்டு வருகின்றனர்
வறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமிய மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வுpவசாய நடவடிக்கைகளுக்காக நுண்கடன்களைப் பெற்று கடனை மீளச் செலுத்த முடியாது, நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நான் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்காக. 1400 மில்லியன் ரூபாவை நிதியமைச்சர் மங்கள சமரவீர அதற்காக ஒதுக்கியுள்ளார்.
வறட்சி தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் எனப் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலும், பெண்களே கடன் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் 5000 ஏக்கரில் தெங்குப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவதற்கான திட்டம் ஒன்றினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதில் பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அரிய சந்தர்ப்பம் வழங்கப்படும்.
வடக்கு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடன் சுமையைப் பொறுத்தவரையில்,அரசாங்கம் இந்த வருடத்தில் மாத்திரம் 655 டொலர் பில்லியன் ரூபாயை தவணையாக செலுத்த வேண்டியுள்ளது.
நாட்டில் நாம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். நல்லிணக்கத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்குத் தெற்கு மக்களுக்கிடையில் சிறந்த நல்லுறவை ஏற்படுத்துவதே எமது நோக்கம்.
அரசியல் தீர்வு மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல வகைகளிலும், அதற்கான எதிர்ப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் வடக்கு மக்களும் நின்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்யப்படும். அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் செயற்படுவது முக்கியம் தற்போது, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. அது நல்லிணக்கத்திற்கு சிறந்தொரு முயற்சி. எனினும், தமிழில் தேசிய கீதம் இசைப்பதன் மூலம், நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக சிலர் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில், அவர்களே நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்கள்.