சஜித்க்கு பதவி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த ரணில்!
ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்க கடமையாற்றுவதில் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.
பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தாகவும், பிரதமரிடம் வெளிப்படையான முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய அனைத்து கட்சிகளுடனும் கலந்தாலோசித்து ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இறுதி முடிவு எடுப்பதாக பிரதமரிடம் எடுத்துரைத்தாகவும் அவர் கூறினார்.
இதுவரை சஜித் பிரேமதாசவுக்கு ஜனதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படாமை குறித்து ஊடகவியலாளர்கள் இதன் போது கேள்வி எழுப்பியதற்கு பௌத்த மத கோட்பாடுகளை மையப்படுத்தியே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று இரவு 9.30 க்கு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதில் குறித்த இருவரையும் தவிர அமைச்சர்களான கபீர் ஹசீம், மலிக் சமரவிக்ரம, ராஜித்த சேனரத்ன மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் ஒரு மணித்தியாலமக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசாங்கத்துடன் இணைந்துள்ள மேலும் சில கட்சிகளின் ஆதரவையும் பெற்றால் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதில் தனக்கு பிரச்சினை இல்லை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குறித்து மேலும் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.