Thursday , November 21 2024
Home / முக்கிய செய்திகள் / மோடியைச் சந்தித்தார் ரணில் – பொருளாதார உடன்பாடும் கைச்சாத்து

மோடியைச் சந்தித்தார் ரணில் – பொருளாதார உடன்பாடும் கைச்சாத்து

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்தச் சந்திப்பு ஆரம்பமாகியது.

இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

 

அத்துடன், இந்திய, சிறிலங்கா பிரதமர்களின் முன்னிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜூம், சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும், பொருளாதாரத் திட்டங்களில் ஒத்துழைத்துச் செயற்படுவது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டு, பத்திரங்களை பரிமாற்றம் செய்தனர்.

இந்தச் சந்திப்பி்ல் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அதேவேளை, பேச்சுக்களின் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது கீச்சகத்தில்,“ எமது குடிமக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் இந்தியா- சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவான பேச்சுக்களை நடத்தியதாக” பதிவிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv