என்னுடன் இருக்கின்ற தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நாட்டை அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளுவது முறையானதல்ல.
ஜனாதிபதி தனது சட்டவிரோதமான நடவடிக்கையினால் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் தன்னால் பணியாற்ற முடியாதிருந்ததாகவும் அவரின் பொருளாதாரக் கொள்கைகள் நிலைமைக்குப் பொருத்தமானதாக இருக்கவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற கூட்டத்தில தெரிவித்திருந்தமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே இதனைத் தெரிவித்திருக்கிறார்.
Whatever President Sirisena’s personal issues with me may be, he should not hold the people he has been elected to serve to ransom by plunging the country into constitutional chaos through his illegal and immoral actions.
— Ranil Wickremesinghe (@RW_UNP) 5. November 2018