Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறங்க போகிறாரா?

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறங்க போகிறாரா?

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுவேட்பாளரைக் களமிறக்காது என தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க எதிர்ப்பார்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த நேரத்தில் பொறுத்தமான வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாம் எங்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவைத்தான் மனதில் வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கி வரும்போது, கலந்தாலோசித்து வெற்றி பெறக்கூடிய ஒருவரை வேட்பாளராக நியமிப்போம். அது குறித்து யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

எங்களுடன் போட்டியிடுவது, மொட்டா அல்லது சுதந்திரக் கட்சியா என்பதிலேயே பிரச்சினை இருக்கிறது.இந்த முறை நாம் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தமாட்டோம். ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருவரே போட்டியிடுவார். எங்கள் கட்சியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். இந்த பிரச்சினையின் பின்னர் பல தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கியவுடன், ஐக்கிய தேசியக் கட்சி துண்டுதுண்டாக உடையும் என பலரும் நினைத்திருந்தனர். சில ஊடகங்களும் அவ்வாறு எண்ணியிருந்தன. ஆனாலும், இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அரசியலமைப்பினைக் காப்பாற்ற ஒன்றிணைந்தனர்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv