சிறிலங்கா அரசாங்கம் சார்ந்த விளம்பரங்கள் தொடர்பில் இறுக்கமான ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதற்கான யோசனையொன்றுக்கு நேற்றைய தினம் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு அரச விளம்பரங்களை வழங்குவதை குறைக்க திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இதனை ஒரு யோசனையாக இன்று நடைபெறவுள்ள வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் ரணில் தலைமையிலான ஆட்சி மீண்டும் ஆரம்பித்த நிலையில் வருடத்தின் முதலாவது அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இன்றையய அமைச்சரவைக் கூட்டம் பரபரப்பாக இருக்குமென ஜனாதிபதி தரப்பு தகவல்கள் கூறுகின்றன.