Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த காலநிலையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பண்டாரவளை, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, கொஸ்கொட, கம்புறுப்பிட்டிய, மீற்ரியாகொட மற்றும் மடுள்சீம ஆகிய பிரதேசங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதுவரை 16 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

694 வீடுகளும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv