ரஜினி ஈஸ் பேக் என்ற கொண்டாட்டத்தில் உள்ளார்கள் ரசிகர்கள். காரணம் பேட்ட பட போஸ்டரும், டிரைலரும் ரசிகர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சூப்பர் ஸ்டாருக்கே உரியதான ஸ்டைல், கொஞ்சம் லொள்ளு என எல்லாம் படத்தில் உள்ளது. இந்த ரஜினியை தான் நாங்கள் பல வருடங்களாக எதிர்ப்பார்த்தோம் என ரசிகர்கள் கமெண்ட் செய்ததை பார்த்திருப்போம்.
படத்தின் ரிலீஸ் நெருங்க படம் குறித்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது படம் USAவில் 120 லொகேஷனில் ப்ரீ புக்கிங்கில் மட்டும் $225K வசூலித்துள்ளதாம்.
இப்போது கிடைத்த தகவல்படி 140 லொகேஷனில் படம் $315K வரை வசூலித்துள்ளது.