அனைவரும் எதிர்பார்த்து வந்த காவிரி நதி நீர் விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. நீண்ட நாளாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இருந்து வந்த இந்த விசயத்தில் இன்று ஒரு சுமூக தீர்வு எட்டியுள்ளது.
இந்நிலையில் ரஜினி என்ன சொல்வார் என எதிர்பார்த்து வந்தனர். சிலர் கருத்துக்கள் கூறியும் வந்தனர். இந்நிலையில் ரஜினி தற்போது ட்விட்டரில் இதுகுறித்து கூறியுள்ளார்.
இதில் அவர் காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
— Rajinikanth (@superstarrajini) 16 février 2018