Sunday , April 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்

மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்

பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒருமையில் பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம், ரஜினிகாந்த் மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுது.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாகச் சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்தப் பத்திரிகை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv