சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் யாராலும் அசைக்க முடியாமல் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார். இந்நிலையில் நேற்று மலேசியாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடந்தது.
இதில் ரஜினி தன் மலரும் நினைவுகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டார், அப்போது பேருந்து நடத்துனராக இருக்கும் போது ‘சும்மா முடியை கோதிவிட்டு ஏறி 5 நிமிஷத்தில் டிக்கெட் போட்டு விடுவேன்.
இதையே தான் பாலசந்தர் அவர்களிடம் செய்து காட்டினேன், அவர் இதை மாற்றிவிடாதேடா, இது தான் உன் பலம்’ என்று கூறினார் என ரஜினி கூற மேடையே அதிர்ந்தது.