சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா, அரசியல் என தற்போது பிஸியாகவுள்ளார். இன்னும் சில தினங்களில் இவர் தன் கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்கவிருப்பதாக தெரிகின்றது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவில் சமீபத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
அங்கு அவரிடம் ஒரு விளம்பர நிறுவனம் இதில் நடியுங்கள் இரண்டு நாட்களுக்கு ரூ 30 கோடி தருகின்றோம் என கூறியதாம்.
ஆனால், ரஜினியோ எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டாராம்.