தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்கள் என்றால் அது ரஜினியும் கமலும் தான். அஜித்- விஜய் என்ற போட்டி நிலவும் வரை இவர்களது ஆட்சி தான் கோலிவுட்டில் நடைபெற்றது. இப்போதும் நடைபெறுகிறது.
ஆனால் புது வருகைகளின் எண்ணிக்கை அதிகமானதால் அவர்களுக்கும் வழிவிடும் நோக்கில் இருவரும் அரசியல் பக்கம் சென்றனர். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல் தொடங்கி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
ரஜினி இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்காததால் இந்த தேர்தலை தவிர்த்துள்ளார். ஆனால் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இன்றி தனது நெடுங்கால நண்பரான கமலுக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
https://twitter.com/rajinikanth/status/1099710785431887872
https://twitter.com/ikamalhaasan/status/1099714416428240896