Sunday , April 20 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ரஜினியின் அதிரடி முடிவு?

ரஜினியின் அதிரடி முடிவு?

டிசம்பர் 31-ஆம் தேதி தான் அரசியலில் என்ன முடிவு எடுக்கப்போகிறேன் என்பதை அறிவிக்க உள்ளதாக ரஜினி கூறியதை அடுத்து அவரது ரசிகர்கள் 31-ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த முறை ஏமாற்றாமல் அவர் அரசியல் கட்சி குறித்து அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இந்தமுறையும் அவர்களுக்கு ஏம்மாற்றம் தான் என்கிறது ரஜினி வட்டார தகவல்கள். அரசியல் கட்சி தொடங்குவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்பதை இவ்வளவு நான் ஆராய்ந்து உணர்ந்திருக்கிறார் ரஜினி.

அதற்கு அடித்தளம் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். எனவே முதலில் பவுண்டேஷன் ஒன்றை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்து தனது பவுண்டேஷன் மூலம் மக்கள் ஆதரவை முதலில் பெறுவோம் என்ற திட்டத்தில் ரஜினி உள்ளாராம். இதைத்தான் ரஜினி 31-ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மேலும், காலா, 2.0 ஆகிய படங்கள் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியாக உள்ளது. இந்த நேரத்தில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டால், அது தனது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணத்தை எடுக்க சிரமமாகிவிடும். எனவே தனது அமைப்பின் மூலம் தற்போது மக்களுக்கு நல்லது செய்யலாம் என்ற முடிவில் உள்ளாராம் ரஜினி.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv