Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ரஜினிக்கு வயசாயிடுச்சி.. அவரால முடியாது : ராஜேந்திர பாலாஜி

ரஜினிக்கு வயசாயிடுச்சி.. அவரால முடியாது : ராஜேந்திர பாலாஜி

செல்லும் இடமெங்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை ராஜேந்திர பாலாஜி விமர்சித்து வருகிறார். 3 அமாவாசைகளுக்குள் கமல்ஹாசன் கட்சி காணாமல் போய் விடும் என்றார். அதன்பின், ஒரு தேர்தல் நடந்து முடிந்தால் கமல்ஹாசன் கட்சியே இருக்காது எனக்கூறினார்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என கருத்துக்கணிப்பு வெளியானதாக கூறுகிறார்கள். அது கருத்துக் கணிப்பு. யார் முதல்வர் என்பதை மக்களே முடிவு செய்வார்கள். ரஜினிகாந்த் நல்லவர்தான். ஆனால், அவரின் குணத்திற்கு அரசியலில் இறங்குவது சந்தேகம்தான். மேலும், அவருக்கு 70 வயதாகி விட்டது. அவரால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்ய முடியாது” என அவர் தெரிவித்தார்.

அவரின் இந்த பேட்டி ரஜினி ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv