Tuesday , October 14 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / உயிரிழந்த முக்கிய பிரமுகருக்கு ரஜினி கொடுத்தது இத்தனை லட்சமாம்!

உயிரிழந்த முக்கிய பிரமுகருக்கு ரஜினி கொடுத்தது இத்தனை லட்சமாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என வெளிப்படையாக கூறிவிட்டார். சட்டசபை தேர்தல் தான் தன்னுடைய நோக்கம் என கூறிவிட்டார்.

அவர் ரஜினி மக்கள் இயக்கம் மூலம் அரசியலுக்கான பணிகளை செயல்படுத்து வருகிறார். ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட ரஜினி மக்கள் இயக்க இணை செயலாளர் மகேந்திரன் கடந்த ஜனவரி 5 ம் தேதி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரின் குடும்பத்தினரை நேரில் அழைத்த ரஜினி அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு மன்றம் சார்பாக ரூ 40 லட்சமும், தன்னுடைய சொந்த நிதியாக ரூ 10 லட்சமும் கொடுத்துள்ளார்.

அத்துடன் இறந்த மகேந்திரனின் மகன்களின் படிப்பு செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv