Friday , January 17 2025
Home / சினிமா செய்திகள் / ரஜினி-முருகதாஸ் பட அறிவிப்பு தாமதமாக இது தான் காரணமா?

ரஜினி-முருகதாஸ் பட அறிவிப்பு தாமதமாக இது தான் காரணமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்திற்கு பின்னர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதை இயக்குனரே சமீபத்தில் நடந்த விருது விழாவில் உறுதியாக அறிவித்தார்.

இதுவரை ஒருபடம் முடியும் முன்பே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு வரும் ரஜினி தற்போது முருகதாஸ் படம் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. அது தாமதமாக காரணம் ரஜினி கேட்கும் மிகப்பெரிய சம்பளம் தான் என கூறப்படுகிறது .

2.0 படமும் அதிக லாபம் தமிழ்நாட்டில் ஈட்டவில்லை, பேட்ட படத்தின் வியாபாரமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் ரஜினி கேட்கும் மிகப்பெரிய சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர் தயங்குவதாக கூறப்படுகிறது.

அதனால் தான் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv