Friday , August 22 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / மோடியை தூங்க விடமாட்டேன்: ராகுல்காந்தி சபதம்

மோடியை தூங்க விடமாட்டேன்: ராகுல்காந்தி சபதம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விடமாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்துள்ளன. பாஜக கோட்டையாக திகழ்ந்து வந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களும் காங்கிரஸ் வசம் சென்றுவிட்டது. மேலும் மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான வாக்குகளைக் கூடப் பெற வில்லை. மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். பதவியேற்றதும் மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வராக பதவியேற்ற கமல்நாத் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்தார்.

இதேபோல் மற்ற 2 மாநிலங்களிலும் விரைவில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராகுல், நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற 6 மணிநேரத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தோம். ஆனால் விவசாயிகளை காப்பேன் என தேர்தல் பரப்புரைகளில் மட்டுமே பினாத்தும் மோடி, ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார்.

எதற்காக அவர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்ற காரணத்தை கூற வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என அவர் ஆவேசமாக பேசினார் ராகுல்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv