Wednesday , August 27 2025
Home / முக்கிய செய்திகள் / நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம்

நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம்

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறார் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

நூற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. அதனையடுத்து. பூநகரி மட்டுவில்நாடு பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..

அதிகாரிகள் அரசியல் தரப்புக்கள் பொது மக்கள் என ஏராளமானவா்கள் கலந்து கொண்டு அன்னாரின் பூதவுடலுக்கு
அஞ்சலி செலுத்தினார்கள்.

அந்த வகையில் அஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா்களான மாவை சேனாதிராஜா, சி. சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் தவநாதன் செஞ்சோலை சிறுவர் இல்ல இயக்குநர் குமரன் பத்மநாதன் (கேபி) யாழ் போதன வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட் ட பலர்
கலந்து கொண்டனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv