சென்னை ஆர்.கே.நகரின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகி வருகிறது.
ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..
பரபரப்பு தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் உங்களுக்காக
கட்சிகள் | வாக்குகள் – முன்னணி | வெற்றி |
டிடிவி தினகரன் (சுயேட்சை) | 89,013 | 1 வது இடம் |
மதுசூதனன் (அதிமுக) | 48,306 | 2 வது இடம் |
மருதுகணேஷ் (திமுக) | 24, 581 | 3 வது இடம் |
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) | 3,802 | 4 வது இடம் |
கரு.நாகராஜன் (பாஜக) | 1,368 | |
நோட்டோ | 2,348 | |
சுயேட்சைகள் | 0 |
தற்போது அனைத்து சுற்று எண்ணிக்கையும் முடிவடைந்து விட்டது. இதில், அதிமுக வேட்பாளர் மது சூதனனை விட 40,707 வாக்குகள் பெற்று தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.