மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயத்துக்காக முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 தொகுதிகள் அந்தவகையில் முன்மொழியப் பட்டுள்ளன. யாழ்ப்பாணம்–தீவகம் ஒன்றிணைக்கப்பட்ட தொகுதியாக முன்மொழிவு சமர்ப்பிக் கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மாகாணசபைகள் எல்லை நிர்ணயக் குழுவுக்கு சில நாள்க ளுக்கு முன்னர் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பி டப்பட்டுள்ளதாவது:
மாகாண சபைத் தேர்தலின் புதிய திருத்தத்துக்கு அமைய 50 வீதம் தொகுதி வாரியாகவும் 50 வீதம் விகிதாசார ரீதியாகவும் பிரதிநிதிகள் தேர்வு இடம்பெறவுள்ள நிலையில் மாவட்ட ரீதியிலான எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்துக்கள் பெறப்படுகின்றன.
மாகாண சபைத் தேர்தலில் ஒரு தொகுதிக்கு குறைந்த பட்சம் 70 ஆயிரம் மக்களை உள்ளடக்கிய வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டை 8 தொகுதிகளாக பிரிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 882 மக்களையுடைய யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 50 ஆயிரத்து 759 மக்களுடன், நெடுந்தீவு, ஊர்காவற்றுறை தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய 29 ஆயிரத்து 848 அங்கத்தவர்களை உள்ளடக்கிய வகையில் ‘யாழ்ப்பாணம்–தீவகம் தொகுதி’ எனவும், நல்லூர்ப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள 68 ஆயிரத்து 142 மக்களுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஜே/ 61, 257, 258, 259 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகை யில் 75 ஆயிரத்து 784 அங்கத்தவர்களுடன் ‘நல்லூர்த் தொகுதி’ எனவும் காரைநகர் பிரதேச செயலகத்தின் 9 ஆயிரத்து 576 மக்களையும், வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் 46 ஆயிரத்து 438 மக்களையும், வலிகாமம் தெற்கு பிரதேச செயலகத்தின் கிராம சேவகர் பிரிவுகளான ஜே/ 131, 132,133,134, 135,136 மற்றும் 141, 142,143,144 ஆகிய 10 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 21 ஆயிரத்து 895 மக்கள் வாழ் பிரதேசத்தையும் இணைத்து 77 ஆயிரத்து 909 அங்கத்தவர்களை உள்ளடக்கிய வகையில் ‘வட்டுக்கோட்டைத் தொகுதி’ எனவும், வலி.
வடக்கு பிரதேச செயலர் பிரிவின் 29 ஆயிரத்து 518 மக்களையும் வலி. தெற்கின் கிராம சேவகர் பிரிவுகளான ஜே/195 முதல் ஜே/211 வரையான 17 கிராம சேவகர் பிரிவில் வாழும் 28 ஆயிரத்து 232 மக்களையும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஜே/145 முதல் 156 வரையான கிராமங்களின் 19 ஆயிரத்து 762 மக்களையும் இணைத்து 76 ஆயிரத்து 762 மக்களுடன் ‘காங்கேசன்துறைத் தொகுதி’ எனவும் முன்மொழியப்பட் டுள்ளன.