தெல்லிப்பழை மருத்துவமனையில் நேற்றுமுன்தினமிரவு கடமையில் இருந்த மருத்துவருடன் மதுபோதையில் சென்ற பொலிஸார் தகாத வார்த்தைகளால் கதைத்துக் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
காயமடைந்த மூதாட்டி ஒருவரை 9 மணியளவில் முச்சக்கர வண்டிச் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மூதாட்டியைப் பொறுப்பேற்ற மருத்துவர் மூதாட்டிக்கு என்ன நடந்தது என்று வினவியுள்ளார்.
மூதாட்டிக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியாது, ஆனால் மூதாட்டியை காங்கேசன்துறைப் பொலிஸாரே ஏற்றியனுப்பினர் என்று முச்சக்கர வண்டிச் சாரதி தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறைப் பொலிஸாருடன் மருத்துவமனைத் தரப்பினர் தொடர்பு கொண்டனர். மூன்று பொலிஸார் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். அவர்களில் ஒருவர் மதுபோதையில் காணப்பட்டார்.
அதன்போதே தகாத வார்த்தைகளைப் பேசியதோடு நடந்துகொண்டவிதமும் தகாதமுறையில் அமைந்துள்ளது என்று பொலிஸார் மீது மருத்துவத் தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.