Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / இள­வ­ரசர் ஹரி, மெகான் திரு­மணம்

இள­வ­ரசர் ஹரி, மெகான் திரு­மணம்

பிரித்­தா­னிய இள­வ­ரசர் ஹரி­யி­னதும் அவ­ரது காதலி மெகான் மெர்­கி­ளி­னதும் திரு­மணம் 7 வரு­டங்­க­ளுக்கு மேல் நீடிக்­காது எனத் தெரி­வித்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள லண்டன் தேவா­லய ஆயர் ஒருவர் திரு­ம­ணத்தில் இணையப் போகும் அவர்­க­ளுக்கு வாழ்த்­து­க்களைத் தெரி­விக்க மறுத்­துள்ளார்.

லண்டன் தேவா­ல­யத்தின் பிரதி ஆய­ரான பீற் புரோட்­பென்ட்­டிடம் (65 வயது) நீங்கள் எதிர்­வரும் ஆண்டு திரு­மண பந்­தத்தில் இணை­ய­வுள்ள ஹரி மற்றும் மெகா­னுக்கு அவர்­க­ளது மகிழ்ச்­சி­க­ர­மான வாழ்­ வுக்கு வாழ்த்­துக்­களைத் தெரி­விக்க விரும்­பு­கி­றீர்­களா என வின­வப்­பட்ட போது, தான் இது தொடர்பில் எவ்­வித விமர்­ச­னத்­தையும் செய்­வ­தற்கு தற்­போது விரும்­ப­வில்லை என அவர் தெரி­வித்­துள்ளார்.

ஆனால் பிரித்­தா­னிய கன்­டர்­பரி பேரா­ய­ரான ஜஸ்டின் வெல்பி மற்றும் அமெ­ரிக்க நியூயோர்க் நகர பேராயர் ஜோன் சென்­தமு ஆகிய சிரேஷ்ட மத­கு­ருமார் இள­வ­ரசர் ஹரி மற்றும் மெகான் திரு­மண பந்­தத்தில் இணை­வது குறித்து மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

2011 ஆம் ஆண்டில் இள­வ­ரசர் ஹரியின் சகோ­த­ர­ரான இள­வ­ரசர் வில்­லி­யத்தின் திரு­மணம் இடம்­பெற்றபோது அந்­நி­கழ் வில் கலந்து கொள்­வ­தற்கு ஆய­ரான பீற் புரோட்­பென்ட்­டுக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை.

அவர் இள­வ­ரசர் வில்­லி­யத்­தையும் அவ­ரது துணை­வி­யான கத்­த­ரீ­னையும் வெறுக்­கத்தக்க பிர­ப­லங்கள் எனவும் நல்லெண்ண மின்றி காதல் கொண்டவர்கள் எனவும் குறிப்பிட்டதையடுத்தே அவருக்கு அந்தத்திருமணத்தில் கலந்து கொள்வதற்கு அனு மதி மறுக்கப்பட்டிருந்தது.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …