ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான முக்கிய சந்திப்பு இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தகவலை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தினார்.
புதிய அரசமைப்பு முயற்சி தாமதமடைந்துவருவதால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு மேற்படி சந்திப்பில் ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.
அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கூட்டமைப்பு பேசவுள்ளது.
வடக்கில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் பேசுவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.